LYRIC

படம் :கரகாட்டக்காரன் 

பாடகர்கள் :மனோ ,சித்ரா 

இசை : இளையராஜா

 மனோ  : முந்தி முந்தி விநாயகனே 

முப்பது முக்கோடி தேவர்களே 

முந்தி முந்தி விநாயகனே 

முப்பது முக்கோடி தேவர்களே 

வந்து வந்து எம்மை காரும்மையா 

வந்து வந்து எம்மை காரும்மையா 

வந்தனம் வந்தனம் தந்தோமையா 

வந்தனம் வந்தனம் தந்தோமையா 

சித்ரா : சக்தி உள்ள சிவ குருவே 

நித்தம் கொடுத்தே  வணக்கமையா 

சக்தி உள்ள சிவ குருவே 

நித்தம் கொடுத்தே  வணக்கமையா 

பக்தியுடனே பதம் பணிந்தேன் 

பக்தியுடனே பதம் பணிந்தேன் 

நிச்சயம் வெற்றியே  தாறுமையா 

நிச்சயம் வெற்றியே  தாறுமையா

மனோ : வானத்துல சுத்துதடி 

ஒன்பது நவக்கிரகம் 

பூமியிலே எடுத்து வந்தே  

தலையிலாத கரகம்

ஊரு உலகம் மெச்சிவரும் 

உத்தமபாளைய சரகம் 

உள்ளமுள்ள ஜனங்க இந்த 

பட்டகேட்டு கேரங்கும் 

சித்ரா  : தேனி  பெரியகுளம் 

தென் மதுரை ஜில்லா

வெள்ளி மெடலு பல 

வாங்கி வந்தே நல்லா

தேவி சரஸ்வதி பேர 

சொல்லி படுச்சே 

தேசாதி தேசமெல்லா 

மேடை ஏறி ஜெயிச்சேன்

மனோ : கோடை இடி முழக்கம் 

கொட்டு மேளம் கேட்டு 

கூட ஒலிக்குதடி 

நானும் பாடும் பாட்டு 

சோடை சோணக்கமில்லை 

மேடை ஏறும் காலு 

வாடி பழக்கமில்லை 

வாலிபமான ஆளு

சித்ரா : என்ன எதிர்த்து நின்னு 

ஜெயிக்கும் ஆளு யாரு

பொன்னனான காலுக்கொரு

பதில சொல்லிபாரு

பொண்ணெல்லாம் பூவு 

இந்த ஆம்பளைங்க யாரு 

தன்ன மறந்து நின்னு 

தவிக்கும் வாழ நாறு .

Movie : Karagattakaran

Singers : Mano & Chitra

Music : Ilaiyaraja

Mano: Mundhi Mundhi Vinaayagane
Muppatthu mukkodi thevargale
Mundhi Mundhi Vinaayagane
Muppatthu mukkodi thevargaale

Mano : Vandhu vandhemmai kaarumaiyaa
Vandhu vandhemmai kaarumaiyaa
Vandhanam vandhanam thandhommaiyaa
Vandhanam vandhanam thandhommaiyaa

Chidra: Sakthi ulla sivaguruve
nittham koduppen Vanakkamaiyaa
Sakthi ulla sivaguruve nittham
koduppen Vanakkamaiyaa
Bhakthiyudane patham panindhen
Bhakthiyudane patham panindhen
Nichchayam vetriya thaarummaiyaa
Nichchayam vetriya thaarummaiyaa

Mano: Vaanatthula sutthudhadi
ombhodhu nava keragho
Bhoomiyila yedutthu vandhen
thalaiyila thaan karagho
Oorulagham mechi varum
utthama paalaiyam saragha
Ullamulla janangha indha
paattak kettu kerangho..

Chidra: Dhevi periyakulam
then madhura jillaa..
Velli medalu pala
vaanghi vandhen nallaa..
Dhevi sarasuvathi pera solli padichen
Dhesaadhi dhesamellam
medai yeri jeichen

Mano: Kodai idi muzhakkam
kottu melam kettu
Kooda olikkudhadi naanum paadum paattu
Sodai sonakkamillai medai yerum kaalu
Vaadi pazhakkamillai vaalibhamaana aalu…..

Chidra: Yenna yethirthu
ninnu jeikkum aalu yaaru
Ponnaana kaalukkoru badhila solli paaru
Ponnellaam poovu indha aambalainga yaaru
Thanna marandhu ninnu
thavikkum vaazha naaru…..

One Line Story

கரகாட்டக்காரன் கங்கை அமரன்  ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம் ஆகும் . இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த வாழைப்பழ பெரிய அளவில் வெற்றி பெற்று நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படமாகும்.

நகைச்சுவை கலந்த காதல் கதை. இரு கரகாட்டக் கலைஞர்களின் காதலை மையப்படுத்தி கோர்வையான திரைக்கதையில் உண்டான நகைச்சுவைத் திரைப்படம் இத்திரை படத்தில் சந்தான பாரதி, கனக, கோவை சரளா, காந்திமதி ஜூனியர் பாலைய்யா மற்றும் பாலர் நடித்துள்ளனர்.

Ramarajan

அக்கிராமத்தில் காமாட்சி கரகாட்டக் கலையில் பயிற்சி பெற்ற சுற்றியுள்ள கிராமங்களில் மிகவும் பிரபலமான  வல்லாள். அவ்வூர் பண்ணையார் காமாட்சியின் மேல் மோகம் கொண்டு அவளை அடைய அவளிடம் தவறான மோகத்தில் விழைய அவளால் அவமதிக்கப்படுகிறான். பகையுணர்வின் காரணமாக பண்ணையார் அந்த வருட திருவிழாவிற்கு காமாட்சி கரகாட்டத்தை தடை செய்து சேந்தம்பட்டி முத்தையன் கரகாட்டக்காரர்களை ஒப்பந்தம் பண்ணி ஆட அழைக்கிறார். வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து காமாட்சியின் ஆட்டத்திற்கு தடை விதிக்கிறான்.இதனால்  சேந்தம்பட்டியைச் சேர்ந்த முத்தையா கரகாட்டக் குழுவினருக்கும் காமாட்சி ஆட்ட குழுவினருக்கும் மோதல் முற்றுகிறது

Gangai Amaran

முத்தையாவிடம் காமாட்சியின் தோழிகள் அவரிடம் சண்டையிடுகிறார்கள். இதன் காமாட்சி சிறந்த ஆட்டக்காரி எனக் கேள்வியுறும் முத்தையா அவளைக் காணத் துடிக்கிறான்.இங்கு நடந்த விவாதத்தை காமாட்சியிடம் கூறுகிறார்கள் அதற்க்கு காமாட்சி தேவை இல்லாத சண்டை என்று கூறுகிறாள்.   அன்றைய திருவிழாவில் நடனமாடும் முத்தையா அதைக் காண வந்த காமாட்சியைக் கண்டு காதல் வயப்படுகிறான். சிறந்த ஆட்டத்திற்காக அவ்வூர் மூத்த ஆட்டக்காரரான கனகாவின் தந்தையால் கௌரவிக்கப்படுகிறான் முத்தையா . மேலும் சிறப்பு விருந்திற்கும் அழைப்பைப் பெறுகிறான். விருந்து அவர்களின் காதலை இன்னும் வலுவடையச் செய்கிறது.

ஊர் திரும்பும் முத்தையா, தாயைக்காண வருகிறான். ஆனால் தன் தங்கையிடம் வம்பிழுத்த இறைச்சிக் கடைக்காரனுக்கு பாடம் புகட்ட அவள் சென்றிருப்பதை உணர்ந்து அவ்விடம் விரைகிறான். அங்கே நடைபெற்ற சண்டையில் அவனைத் தோற்கடித்து வீடு திரும்புகிறான். சில நாட்களுக்குப் பிறகு காமாட்சியைக் காண அவளூருக்கு செல்ல எண்ணுகிறான். அவளையும், அவளின் தந்தையையும் கண்டுரையாடுகிறான். அது மட்டுமல்லாமல் பேச்சு வழக்கால் முத்தையாவும், காமாட்சியும் தங்களிடையே ஆட்டக் கரகத்தில் போட்டியிட சம்மதிக்கின்றனர்.

Ilaiyaraja

போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக இறைச்சிக் கடைக்காரன் மறைந்திருந்து தாக்குகிறான், அதைத் தடுக்கச் சென்ற காமாட்சி காயமுறுகிறாள். பதறி ஓடிவரும் காமாட்சியின் தந்தை மகளின் நிலையை எண்ணி கதறுகிறார். அவ்வண்ணமே வரும் முத்தையாவின் தாயார் தன் தம்பி(காமாட்சியின் தந்தை)யைக் கண்டு கோபமுறுகிறாள். தான் யாரை இவ்வளவு நாட்கள் காணவே கூடாது என்று  இருந்த வரைக் கண்டதாய் சாடுகிறாள். இருப்பினும் முத்தையா தன்னைக் காப்பாற்றிய காமாட்சிக்கு சிகிச்சை அளிக்கக்கோருகிறான். ஆயினும் தாயின் வற்புறுத்தலினால் அவ்விடத்திலிருந்து விடைபெற மனமில்லாமல் காமாட்சியின் தந்தையிடம் ஆறுதல் கூறி நகர்கிறான். இதற்கு இடையில் கவுண்டமணி செந்தில் கோவை சரளா நகைசுவை அங்கங்கு படத்தில் சலிப்பை தராமல் தொடர்ந்து கதையை நகர்த்துகிறது.

காமாட்சியின் நினைவால் வாடும் முத்தையா அவளைக் காண ஏங்குகிறான். அவளைக் காண அவளூர் வரும் போது அவளது மாமான் பலராமனால் தடுக்கப்படுகிறான். விரக்தியுடன் வீடு திரும்புகிறான். தாயிடம் தன் மாமனைப் பற்றி வினவும் போது அவர் திருடன் என்றும், தன் கணவர் நலிவுற்ற போது மருத்துவ செலவிற்காக சில நகைகளை அவரிடம் கொடுத்தனுப்பியதாகவும் அவர் திரும்பாமல் தன் கணவரின் இறப்புக்கு காரணமானதாகவும் சாடுகிறாள். முத்தையா நிலையை எண்ணி வருத்த முறுகிறான்.

காமாட்சி மற்றும் முத்தையா இருவரது கரகாட்டக்காரர்கள் குழுவை வெளியூர் நபர்கள் தேர்வு செய்கின்றனர் அண்ணல் அவற்றில் கலந்து கொள்ள விரும்பவில்லை என தவில் வித்வானிடம் கூறுகிறார். உடனே  தவில் வித்வான்  மற்றொரு ஊரின் திருவிழாவிற்கு காமாட்சி ஆட வரும் செய்தியை முத்தையாவிடம் கூறுகிறான். இருவரும் அங்கு செல்லும் போது சந்திக்கின்றனர். காமாட்சி மாமானால் இழுத்துச் செல்லப்படுகிறாள். துயருற்ற காமாட்சி தற்கொலைக்கு முயலுகிறாள். மகளின் நிலையை உணர்ந்து, காமாட்சியின் தந்தை தனது அக்காவிடம் தான் நிரபராதி என்பதை எடுத்துரைக்கிறார். தான் நகைகளை விற்கச் சென்ற போது அவை திருட்டு நகைகள் என காவல்துறையால் கைது செய்யப்பட்டு 7 வருடம் சிறை வாசம் சென்றதாகவும் கூறுகிறார். முத்தையாவின் தாயாரும் நகைகள் தனது கணவரிடம் அவரது நண்பரால் கொடுத்து வைக்கப்பட்டதாகவும் அவரும் திருடர்  அல்ல என்பதை விளக்குகிறார்.இருவரும் பகையை மறந்து தனது தம்பியை ஏற்றுக்கொண்டு முத்தையாவிற்கும் காமாட்சிக்கு திருமணம் செய்ய இருவரும்  சம்மதிக்கிறார்கள் 

ஒருவாறாக முத்தையாவிற்கும், காமாட்சிக்கும் திருமண நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனாலும் சின்ராசு பண்ணையாரின் தூண்டுதலால் காமாட்சியின் மாமன் பலராமன் அதைத் தடை செய்கிறான். மேலும் சின்ராசு, காதலர்கள் இருவரும் தற்செயலாக கோயிலில் சந்திப்பதை தெய்வகுற்றம் நடந்துவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைக்கிறான். அதற்கு தண்டனையாக தீமிதித்து உறுதி செய்யும்படி சூழ்ச்சி செய்கிறான்.

திருந்திய பலராமன் சின்ராசுவிடம் முறையிட அவனும் பண்ணையில் கட்டி வைக்கப்படுகிறான். அங்கிருந்து தப்பிக்கும் பலராமன் காளையை அனுப்பிகிறான். அது சின்ராசுவை குண்டத்தில் தள்ளிவிடுகிறது. தன் தவறை உணர்ந்து தீக்காயங்களுடன் தப்பிக்கிறான். இறுதியில் காதலர்கள் திருமணத்தில் இணைகிறார்கள்.

Added by

gaanaisai

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

Verified by MonsterInsights